Jun 02

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு சேவாக் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு சேவாக் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் கும்ப்ளேவின் ஓராண்டு கால பதவி முடிவுக்கு வருகிறது. மேலும் அவருக்கும் கோலிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக எழுந்த செய்திகளையடுத்து இவருக்குப் பதிலாக பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஆனால் இம்முறையும் கும்ப்ளே விண்ணப்பித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் பைபஸ், இந்தியாவிலிருந்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் கர்நாடகத்தை சேர்ந்தவருமான டொட்ட கணேஷ், முன்னாள் இந்தியா ஏ பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் ஆகியோரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

விரேந்திர சேவாகுக்கு முறையான பயிற்சி அனுபவம் இல்லை என்றாலும் ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு அவர் ஆலோசகராக இருந்து வருவது தற்போது உதவி புரிந்துள்ளது என்பதோடு, கும்ப்ளே, கோலி விவகாரம் தலைதூக்கியதும் சேவாகை பிசிசிஐ நிர்வாகமே பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கக் கோரியதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது.