Jul 28

பிரான்ஸில் திடீரென பெய்த கல் மழை! முக்கிய நகரங்கள் முடக்கம்

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்று திடீரென்று கல் மழை பெய்துள்ளது.இதனால், அப்பகுதிகளில் பயணித்த வாகனங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளன. மேலும், போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் அதிகமாக வெப்ப நிலை நிலவி வந்த நிலையில் இன்று திடீரென்று பெய்த கல் மழை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.