Jul 27

செல்ஃபி எடுத்துக் கொண்டே கார் ஓட்டிய நண்பர்கள்! பின் நடந்த கோரம்

உத்திரகாண்ட் மாநிலத்தில் இளைஞர்கள் மூன்று பேர் கார் ஓட்டிக்கொண்டே செல்ஃபி எடுத்ததால் விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலத்தில் இளைஞர்கள் மூன்று பேர் நைனித்தால் பகுதியில் இருந்து காலாதுங்கி நோக்கி சென்றபோது கார் ஓட்டிக்கொண்டே செல்ஃபி வீடியோ எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்த காணொளி சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.