Jul 27

முட்டையை திருடி மாட்டிக்கொண்ட காவலர்..

சென்னையில் நேற்று பெண் காவலர் ஒருவர் பல்பொருள் அங்காடியில் சாக்லெட்களை திருடி மாட்டிகொண்டார்.

இதனை தொடர்ந்து நேற்று திருப்பதியில் காவலர் ஒருவர் முட்டை திருடி தன் பேண்ட் பையில் போடும் காணொளி காட்சி வெளியாகி உள்ளது.

திருப்பதின் கொரலகுண்டா பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் காவலர் ஒருவர் கடையில் உள்ள நான்கு முட்டைகளை யாரும் எதிர்பாராத நேரத்தில் எடுத்து பேண்ட் பையில் வைத்து செல்கிறார்.


தொடரும் காவலர்களின் திருட்டால் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.