Mar 14

ஐபோனில் தயக்கத்தை வெல்ல புதிய 'அப்'

தயக்கங்களை வெல்ல வழி செய்யும் அப் (செயலி) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'ஸ்டெப்ஸ்' எனும் பெயரில் ஐபோனுக்காவே இந்த அப் பிரத்தியேகமாக அறிமுகமாகியுள்ளது. 

இந்த அப், சிறிய செயல்களைப் பல்வேறு தலைப்புகளில் பரிந்துரைக்கிறது. அவற்றிலிருந்து விரும்பியதை தெரிவு செய்தால் அது தொடர்பாக நினைவூட்டி ஊக்கம் அளிக்கிறது.

பின்னர் அந்தச் செயலில் ஈடுபட்டு அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களையும் இந்தச் செயலில் ஈடுபட அழைக்கலாம்.