Jul 27

”என்னை இவர் கொன்றுவிடுவார்” கொடூரமாக தாக்கிய சைக்கோ கணவர்

அமெரிக்காவில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Becky(47) என்ற பெண் தன் வீட்டில் படுத்துக்கொண்டிருந்த போது அவரது கணவர் Dougherty (45) குடித்து விட்டு வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.


”என்னை இவர் கொன்றுவிடுவார்” என கத்திக் கொண்டே Becky பொலிஸுக்கு போன் செய்துள்ளார். அப்போதும் அடிப்பதை நிறுத்தாத கணவர் பொலிஸ் கார் தன் வீட்டை நெருங்கும் சப்தம் கேட்டே அடிப்பதை நிறுத்தியுள்ளார்.

அங்கு சென்ற பொலிசார் Beckyயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும்  Dougherty கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அவர் தண்டனை காலம் 2 வருடங்களில் இருந்து 8 மாதங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Becky கூறுகையில் பொலிசார்களே என் வாழ்க்கையை காப்பாற்றினர். அவர்கள் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் அன்றே நான் இறந்திருப்பேன். அவர்கள் மிகவும் ஆறுதலாக இருந்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் அவரின் தண்டனை காலம் குறைத்தது சற்று வேதனையாக உள்ளது.

அவர் என்னை ஈவுஇரக்கம் இல்லாமல் தாக்கினார். சுவரில் என்னை இடித்தார். எல்லா இடங்களும் இரத்தம் ஆனது. என்னை விட்டுவிடும் படி கெஞ்சியும் அவர் நிறுத்தவில்லை. என்னை கொல்ல முயற்சித்தார்.

என் செல்போன்களை என்னிடம் இருந்து பறிக்க முயற்சித்தார். ஆனால் ஒரு வழியாக நான் போன் செய்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.