Jul 27

நேருவுக்கு பதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் படம்: காங்., எதிர்ப்பு

கோவா மாநில 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நேரு படம் நீக்கப்பட்டதற்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோவா மாநில 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நேரு படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ்., இணை நிறுவனரும், சுதந்திர போராட்ட வீரருமான விநாயக் சவர்க்கார் படம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக புத்தகத்தின் 68வது பக்கத்தில் மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத்துடன் நேரு அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதனுடன் சேர்த்து மேலும் ஒரு நேருவின் புகைப்படமும், புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.