Jun 02

பாரிஸ் ஒப்பந்தத்தில் மறுபரிசீலனைக்கு ஏதுமில்லை: ட்ரம்ப்க்கு வலுக்கும் கண்டனம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த அமெரிக்காவுக்கு பிற நாடுகள் அதிருப்தி தெரிவித்து பதிலளித்துள்ளன.

பாரிஸ் பருவநிலை மாநாடு கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் போடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 195 நாடுகள் கையெழுத்திட்டன.

டொனால்ட் ட்ரம்ப் கூறியபடி, பாரிஸ் ஒப்பந்தத்தில் புதிதாக மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் டொனால்ட் ட்ரம்பின் முடிவை கண்டித்துள்ளார்.