Jul 26

காகத்தைப் போன்ற தோற்றமுடைய அதிசயப் பறவையைத் தெரியுமா?

காகத்தைப் போலவே தோற்றம்கொண்ட இந்தப் பறவையை பெரும்பாலும் பார்த்திருக்கமாட்டீர்கள். ஆனால் இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கே உரித்தான இந்தப் பறவை குயில் இனத்தைச் சேர்ந்ததாகும்.

பொதுவாக தென்னாசியப் பிராந்தியத்திற்குரிய ஒரு பறவையாகக் காணப்படும் இது இலங்கை மற்றும் தென்னிந்தியக் காடுகளில்தான் அதிகம் வாழ்கின்றன. ஊர் மனைகளில் இவற்றைக் காண்பது அரிதிலும் அரிதாகும்.

குறிப்பாக அடர்ந்த காடுகளின் மேலால் மட்டுமே பறக்கும் தன்மைகொண்டது. Large Cuckoo-Shrike என அழைக்கப்படும் இந்த குயிலின் விசேட குணம் என்னவென்றால், மிகப் பெரிய சத்தத்தில் கூவுவதாகும். இதன் கூவல் ஒலி அடர்ந்த கானகமெங்கும் எதிரொலிக்கும்.

மற்றும் ஏனைய குயிலினங்களிலிருந்து இதன் கத்தும் சத்தம் வேறுபடுகின்றது.

பறப்பின் பின்னர் அமர்கின்றபோது தனது இறக்கையை வேகமாக அணைத்துவிடும். ஏனைய பறவைகள் அமர்ந்ததன்பின்னரே இறக்கையை அணைக்கின்றமை குறிபிடத்தக்கதாகும்.