Jun 02

ஆழமான மத நம்பிக்கை கொண்ட பழமைவாதக் கட்சியின் புதிய தலைவர்

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராகத்  தெரிவு செய்யப்பட்ட Andrew Scheer  ஆழமான மத நம்பிக்கை கொண்ட கத்தோலிக்கர், கருக்கலைப்புக்கு எதிரானவர்.  இவரே அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் ரூடோவை எதிர்த்துப் போட்டியிடுவார்.

பழமைவாதக் கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில், தற்போது அமுலிலுள்ள கருக்கலைப்புத் தொடர்பான சட்டங்களை மாற்றியமைக்கும் வண்ணம், புதிய சட்டமூலங்களை  அரச ஆதரவுடன் அறிமுகப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆயினும் இவ்விடயம் தொடர்பான தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைப்பதை அனுமதிக்க உள்ளதாக அவர் தனது பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்திருந்தார்.

1979 ஆம் ஆண்டில் ஒட்டாவா நகரில் பிறந்த Scheer  உடைய தாய் ஒரு மருத்துவத் தாதி , தந்தை ஒரு நூலகர்.  அவரது தந்தை, கத்தோலிக்க திருச்சபையின்  ஒட்டாவா பிராந்தியத்திற்கான நிரந்தர மூப்பர் ஆவார்.