Jun 02

அமெரிக்க-கனேடிய எல்லையைக் கடக்க முயற்சித்த பெண் மரணம் கடுங்குளிரில் மரணம்

அமெரிக்க-கனேடிய எல்லையைக் கடந்து கனடாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த  கானா நாட்டைச் சேர்ந்த 57 வயதான பெண் மரணம் அடைந்துள்ளார்.

அமெரிக்காவின் Delaware மாகாணத்தில் வசித்துவந்த இவர், டொரொன்டோ நகரில் உள்ள தனது மகளுடன் வாழும் எண்ணத்தில் இருந்ததாக இவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்ற வாரம் அமெரிக்க-கனேடிய எல்லையைச் சட்டவிரோதமாகக் கடந்து கனடாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது இவர் கடும்குளிரின் தாக்கத்தினால் உயிரிழந்தார்.  மனிட்டோபா மாகாணத்தின் எல்லைக் கிராமமான எமர்சன் என்ற இடத்திற்கருகில் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இவரது மரணம் தொடர்பாகக்  கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன் அவர்கள் கனேடியப் பாரளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்தார். “இறந்தவரது குடும்பங்கத்தவர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன் “ என அவர் கூறினார்.