Jul 26

மெல்போர்னில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வரும் புதிய பாப்-அப் இனிப்பு அருங்காட்சியகம்

மெல்போர்ன் நாட்டில் புதிதாக திறக்கப்பட்ட பாப்-அப் இனிப்பு அருங்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாப்-அப் அருங்காட்சியகத்தில் இனிப்பு வகைகளின் பெயர்களிலான ஆறு பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒன்றான இனிப்பு மிட்டாய் நீச்சல் குளத்தில் குதித்து மகிழ குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்புகின்றனர்.

இதே போன்று ஐஸ்கிரிம் அறை, மகிழ்ச்சி அரங்கு, இனிய கனவு அறை என ஒவ்வொரு இடமும் மகிழ்ச்சியை அள்ளித் தருவதாக பார்வையாளர்கள் கூறியுள்ளது.

இதே போன்று கண்ணுக்குள் காட்சிகளை காட்டி விளையாட தூண்டும் புதிய வெர்ச்சூவல் கேம்களுக்கும் அருங்காட்சியகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.