Jun 01

சம்பியன் தொடர்; முதற்போட்டில் இங்கிலாந்து அபாரம்

சம்பியன் தொடரின் ஏ பிரவுக்கான முதலாவது போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 305ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் அபாரமாக துடுப்பெடுத்தாடினார். 

142பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்கஸர்ஸ், 12பவுண்டரிகள் உள்ளடங்கலாக 128ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு துணையாக  முஸ்பிகுர் ரஹீம்72பந்துகளில் 78ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஹேல்ஸ் அதிரடியாக 95 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

அவருடன் இணைந்து நிதானமாக ஆடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காது 133 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அணித்தலைவர் இயன் மோர்கனும் ஆட்டமிழக்காது 75ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு பக்கபலமாக நின்றார்.

இதனால் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 47.2ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனா ஜோ ரூட் தெரிவானார்.