Jul 26

7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளுக்கு உதவிய வரலட்சுமி

பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பின் போது, 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளுக்கு உதவியிருக்கிறார்.

‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளை சந்தித்திருக்கிறார் வரலட்சுமி.

உடனே அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் சென்று இறக்கி விட்டிருக்கிறார். மேலும் இந்த சிறுமிகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.