Mar 14

வாய்ப்பை தவறவிட்ட தென்ஆப்பிரிக்கா

2022ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றிருந்த தென்ஆப்பிரிக்கா அந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டுக்கான n பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விரும்பிய போதும் கனடா வாய்ப்பைப் பெற்றது. இருப்பினும் கனடா அந்த முடிவிலிருந்து விலகிய நிலையில், தென் ஆப்பிரிக்கா டேர்பனில் அப்போட்டிகளை நடத்தும் விருப்பத்தை வெளியிட்டது.

அதற்கான அனுமதி கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கிடைத்திருந்த நிலையில் ஆறமாத காலத்தில் தென் ஆபிரிக்கா குழுவொன்றை நியமித்திருக்கவேண்டும்.

இருப்பனும் தென் ஆபிரிக்க அந்த செயற்பாட்டை முன்னெடுக்காமை பொதுநலவாய போட்டிகள் சம்மேளத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்நாட்டிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.