Jul 25

சுவிஸ் தேசிய தினத்தில் எந்த பட்டாசு வகைகளை வெடிக்கலாம் – FCA அறிக்கை

ஆகஸ்ட் 1 அன்று, வானவேடிக்கைகளின் சத்தமும் வெளிச்சமும் சுவிட்சர்லாந்து முழுவதையும் நிரப்பி விடும். இவற்றில் பல வகையான வான வேடிக்கைகள் இறக்குமதி செய்யப்படுகையில், பெடரல் சுங்க நிர்வாகம் (FCA) மக்கள் இறக்குமதி செய்யக்கூடிய அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பொலிஸ் மத்திய அலுவலகத்திலிருந்து வானவேடிக்கைகளை இறக்குமதி செய்ய அனுமதி தேவை, என FCA தெரிவித்தது. சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக இருக்கும் வரை, ஒரு நபருக்கு அனுமதி இல்லாமல் 2.5 கிலொ வான வேடிக்கை பொருட்களை “பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக” இறக்குமதி செய்யலாம்.

சுவிட்சர்லாந்தில் தரையில் வெடிக்கும் பட்டாசுகள் சட்டவிரோதமானவை, என FCA விளக்கியது.

22 மில்லிமீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட அல்லது மூன்று மில்லிமீட்டர் வரை விட்டம் கொண்ட லேடி க்ராக்கர்ஸ் என்று அழைக்கப்படும் படாசு வகையும் தடை செய்யப்பட்டுள்ளது.

FCA, இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.