Jul 25

லாவோஸில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 100 பேர் காணாமல் போயுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

லாவோஸில் அட்டாபேயு மாகாணத்தில் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

அணையின் கட்டுமானப்பணி 90 சதவிகிதம் முடிந்த நிலையில், அடுத்தாண்டு திறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாலை அணையின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் 6 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள பலரை மீட்க்கும் பணிகளில் ஹெலிக்கொப்ரர் மற்றும் படகுகளின் உதவியுடன் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.