Jul 25

விவசாயிகளுக்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய சூர்யா..!!

தமிழகளவில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கி கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் கௌரவப்படுத்தினர். 

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ’கடைக்குட்டி சிங்கம்’. கார்த்தி, சத்யராஜ், பானுப்பிரியா, ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில், ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விவசாய துறையில் சாதானை படைத்த 5 விவசாயிகள் கௌரவப்படுத்தப்பட்டனர். 

அதன்படி, விவசாயத்தில் அவர்கள் செய்த பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக நெல் ஜெயராமன் உள்ளிட்ட 5 விவசாயிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.