Jul 25

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.

ஓட்டுப் பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.  ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.