Jul 25

படுக்கையறையில் நடனமாடிய பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!!

தனது படுக்கையறையில் நடனமாடிய பெண்ணை ஈரானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது படுக்கையறையில் நடனமாடிய காட்சியை  ஈரான் நாட்டைச் சேர்ந்த  இளம்பெண் மேதா ஹோஜப்ரி இன்ஸ்டாகிராமில் தனது பதிவிட்டார்.

அதை தொடர்ந்து  ஈரான் நாட்டு பாதுகாப்புத்துறை முகவர்கள் மேதா ஹோஜப்ரியை கைது செய்தனர்.

இச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஹோஜப்ரிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் #dancingisnotacrime என்ற ஹேஷ் டெக்குடன் தாங்கள் நடனமாடும் வீடியோக்களை ஏராளமான பெண்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

புகழ் பெற்ற பிரித்தானிய - ஈரானிய நடிகையான நாசினின் போனியாடி  அந்த வீடியோவின் தொகுப்பை வெளியிட்டு ஹோஜப்ரிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ஹோஜப்ரியின் கைது மிகவும் தனிப்பட்ட அரசியல் சாராத அடிப்படை மனித உரிமையைக் கூட ஈரான் மறுப்பதைக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.