Mar 14

வேகப்பந்து வீச்சாளர் இர்பான் இடைநிறுத்தம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற பி.எஸ்.எல்.தொடரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் மொஹமட் இர்பான் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பான் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்துக்கு இருபது  கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். இறுதிப் போட்டியில் பெஷாவர் ஷல்மி கிண்ணத்தை வென்றது. 

இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதன் பிராகாரம் ஷர்ஜில் கான், காலிப் லத்தீப் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இடைநிறுத்தியது. இந்த வரிசையில் தற்போது மொஹமட் இர்பானும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இவரிடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாக்.கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.