Jul 25

எனது வாக்குறுதியை மோடி நிறைவேற்ற வேண்டும்:மன்மோகன் வலியுறுத்தல்

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும் என காங். மூத்த தலைவர் மன்மோகன்சிங் கூறினார்.

பார்லி. மழைக்கால கூட்டத்தொடர்ந்து நடந்து வருகிறது. ஆந்திரா விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது மன்மோகன்சிங் கூறியது, கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அப்போதைய பா.ஜ. எதிர்க்கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே சிறப்பு அந்தஸ்து வழங்கிட வாக்குறுதி அளிக்கப்பட்டது.எனது வாக்குறுதியை தற்போதைய பிரதமராக உள்ள மோடி பரிசீலித்து நடவடிக்கை எடுப்போர் என எதிர்பார்க்கிறேன் என்றார்.