Jul 24

250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி

சிரியாவில் தன்னார்வ தொண்டூழியர்களாக செயற்பட்ட 250 பேரை நாட்டுக்குள் ஏற்றுக்கொள்ளவுள்வதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் படைகள் (ஞாயிற்றுக்கிழமை) சிரியாவின் தென்மேற்கு பிராந்தியங்களை கைப்பற்றியுளன.

அதனைத் தொடர்ந்து அங்கு உதவிப் பணியாளர்களாக செயற்பட்டுவந்த வெள்ளைத் தொப்பித் தொண்டூழியர்கள் அவர்களின் குடும்பங்களுடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மேற்கொண்ட மிகவும் இரகசியமான நடவடிக்கை ஒன்றின் மூலமே இவர்கள் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த இரகசிய வெளியேற்ற நடவடிக்கையின் போது கனடா எந்தவித இராணுவ நடவடிக்கைகளிலும் பங்கேற்கவில்லை எனவும், அவர்களை சிரியாவில் இருந்து யோர்தானுக்குள் கொண்டுவருவதற்கான உதவிகளை மட்டுமே செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு நூற்றுக் கணக்கில் வெளியேற்றப்பட்டுள்ள சிரியத் தொண்டூழியர்களை கனடாவும், மேலும் இரண்டு மேற்குலக நாடுகளும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே அனைத்துலக நாடுகளால் மேறகொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது, வெள்ளைத் தலைக்கவசம் அணிந்தவாறு தன்னார்வ தொண்டூழியர்களாக செயற்பட்டவர்கள் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று 250 சிரியர்களை தனது நாட்டுக்குள் ஏற்றுக் கொள்வதாக கனடா அறிவித்துள்ளது.

குறிப்பாக 50 தொண்டூழியளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 250 பேரை கனடாவுக்குள் அழைப்பதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.