Jul 24

ராகுலுக்கு எதிராக, உரிமை மீறல் 'நோட்டீஸ்'

 ராகுலுக்கு எதிராக பா.ஜ., - எம்.பி.,க்கள் உரிமை மீறல் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். இதனை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

லோக்சபாவில், பிரதமர் மோடி மற்றும் ராணுவ அமைச்சர் நிர்மலா ஆகியோருக்கு எதிராக, ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிய தாக, காங்., தலைவர் ராகுலுக்கு எதிராக, பா.ஜ., - எம்.பி.,க்கள் நிஷிகாந்த் துபே, அனுராக் தாக்கூர், துஷ்யந்த் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர், உரிமை மீறல், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளனர். இதை பரிசீலனை செய்வதாக சபாநாயகர், சுமித்ரா கூறியுள்ளார்.