Jul 24

ராகுல் பிரதமராக ஆதரவு: தேவகவுடா

வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிலைப்படுத்தினால், அவரை ஆதரிப்பதாக முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது, 79 தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றும், 38 தொகுதியை மட்டுமே பிடித்த ம.ஜ.த., தலைமையில் ஆட்சி அமைக்கும் முடிவை ராகுல் எடுத்தார். அவரது இத்தொலைநோக்கு பார்வை என்னை கவர்ந்துள்ளது.

முதிர்ச்சியான தலைவர்கள் எடுக்கும் முடிவை அவர் எடுத்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. லோக்சபா தேர்தலிலும் காங்., உடனான கூட்டணி தொடரும். ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால், ம.ஜ.த., முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.