Jun 01

ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா ஹீரோவுக்கு அக்காவாக நடித்து வருகிறார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் நயன்தாரா பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். , ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். நயன்தாரா அதர்வாவுக்கு அக்காவாக நடித்துள்ளார்.

15 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, தற்போது ஒரு ஹீரோவுக்கு அக்காவாக நடிப்பதோடு, 4 வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். படத்தில் அதர்வா டாக்டராகவும், சிபிஐ அதிகாரியாக நயன்தாராவும் நடித்துள்ளனர்.