Jul 23

ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு... பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்- சு.சுவாமி அட்வைஸ்

ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதன் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறுகையில் ராகுல் காந்தி யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கட்டி பிடித்திருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?

இது முழுக்க முழுக்க நெறிமுறையற்றது. எதிர்காலத்தில் இதுபோன்று நடவடிக்கை ஏற்படாமல் இருக்க வேண்டும். ராகுல் காந்தி கட்டி அணைத்ததாலேயே பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.