Jul 23

பா.ஜ கூட்டணிக்கு வர டிடிவிக்கு அழைப்பா? தமிழிசை பேட்டி

தமிழக பாஜ தலைவர் தமிழிசை மதுரை விமானநிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி குறைப்பு நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்ல. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்து பாஜ தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். டிடிவி தினகரனை கூட்டணிக்கு அழைக்கவில்லை. அவராகவே பாஜவுடன் கூட்டணி இல்லை எனக்கூறி வருவது வேடிக்கையாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்காததில் தவறு இல்லை. ஏனெனில் மத்திய அரசு நிதி மூலமே தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.