Mar 14

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் மகஜர்

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் ஐவர் இன்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை அலுவலகம் ஆகியவற்றுக்கு சென்று மகஜரை கையளித்தனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற கோரப்பட்டிருக்கும் மேலதிக இரண்டு வருட கால அவகாசத்தை வழங்க வேண்டாம் என வலியுறுத்தியே இந்த மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து அமெரிக்க தூதுதரகங்கள், இந்திய பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை அலுவலகம் ஆகியவற்றிற்கு சென்று மகஜர்கள் கையளிக்கப்பட்டன.