Jul 21

தோனிக்கும் எனக்குமிடையே இருந்த உறவு : முதன்முறையாக வாய் திறந்த ராய் லக்ஸ்மி

நடிகை ராய் லக்ஸ்மி மற்றும் இந்திய கிரிகெட் அணியின் தலைவர் டோனி ஆகிய இருவரும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்  கிசுகிசுக்கப்பட்டது .இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ராய் லக்ஸ்மி மனதிறந்துள்ளார் . 

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக ராய் லட்சுமி இருந்தபோது தோனியுடன் டேட்டிங் சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தோனி தனது பள்ளித்தோழியை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

தோனி எனது நண்பர் மட்டுமே, நாங்கள் இருவரும் குறைந்த காலமே டேட்டிங் செய்தோம். மற்றபடி எங்கள் இருவருக்குள்ளும் காதல் இல்லை என ராய் லட்சுமி கூறினாலும், தோனி இதுவரை ராய் லட்சுமி குறித்து பேசியது கிடையாது.

இந்நிலையில், தோனி குறித்து பேசிய ராய் லட்சுமி, தோனியுடனான உறவு ஒரு வடுவாக மாறிவிட்டது. அது நீண்டகாலத்திற்கும் போகாது என நம்பதொடங்கிவிட்டேன். ஏனெனில், மக்கள் இன்றும் பொறுமையுடன் தோனி குறித்து என்னிடம் விசாரிக்கின்றனர்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை வைத்துள்ளோம். டோனிக்கு திருமணமாகி குழந்தை இருக்கின்ற நிலையில், இனியும் நான் அவர் குறித்து நான் பேசவிரும்பவில்லை. அதனை கடந்துசெல்வதே நல்லது என கூறியுள்ளார்.