Jul 21

தமிழகத்தில் இலங்கை தம்பதியினர் கைது!! இவர்கள் செய்த வேலை...

தமிழகம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடம்பெற்ற சிறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியின் ஊடாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சித்த போதே துவாக்குடி காவல்துறையினரால் அவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்ட ஏதிலிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த 33 வயதுடைய ஆணும், அவரது 22 வயது மனைவியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, குறித்த இலங்கை தம்பதியினர் சென்னையிலுள்ள புழல்சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.