Jul 21

லாட்டரி பரிசை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட ரெட்மேன்

கனடாவில் லாட்டரியில் நபருக்கு 60 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் தனது நான்கு நண்பர்களுடன் அவர் பரிசு தொகையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒட்டாவாவை சேர்ந்த பிரயென் ரெட்மேன், ஸ்டீபன், டியோன், கிறிஸ்டோபர், நார்மன் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

ஐவருக்குமே லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் அண்மையில் ஐவரும் இணைந்து ஆளுக்கொரு லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளனர்.

இதில் ரெட்மேன் வாங்கிய சீட்டுக்கு முதல் பரிசாக 60 மில்லியன் விழுந்துள்ளது.

இந்த பரிசு தொகையை ரெட்மேன் தனியாக எடுத்து கொள்ளாமல் தனது நான்கு நண்பர்களுடன் பரிசு தொகையை பகிர்ந்து கொண்டுள்ளார்.