Jul 21

ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.

கணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போன நிலையில் எவ்வித வருமானமும் இல்லாமல் மகனுடன் கூலி வேலைக்குச் சென்றும் மற்றும் சகோதரர்கள் மூவர் போராளிகளாக இருந்து வீரச்சாவடைந்தும் இன்னுமோர் சகோதரர் எல்லைப்படையில் இருந்து வீரச்சாவடைந்தும் உள்ள  பெண்ணுக்கு இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத் தமிழரான திருமதி சரஸ்வதி சண்முகநாதன் 16-03-2018 அன்று யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக  வழங்கிய 10 லீற்றர் பால் தரக்கூடிய அடுத்த மாதம் கன்றீனப் போகும் பசுவை களவாடி  வெட்டி இறைச்சியாக்கி கன்றை வெளியில் எடுத்து வீசி மிருகத்தனமனா செயலினை நிகழ்த்தி உள்ளது ஒரு கும்பல்