Jul 20

வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.


தாலிபான் அமைப்பினரை பணியவைத்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கும் நோக்கில் தீவிரவாதிகளின் மீதான வான்வழி தாக்குதலை அமெரிக்கா அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள சர்தாரா எனும் இடத்தில் தீவிரவாதிகளுக்கு  எதிரான தேடுதல் வேட்டையின் போது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், குறித்த தாக்குதலை நடத்தியது அமெரிக்க படையினரா? அல்லது ஆப்கானிஸ்தான் படையினரா? என உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனிஷ் தெரிவித்தார். 

இதற்காக, தாக்குதல் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொள்வதற்காக காபூலிலிருந்து விசாரணை குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.