Jul 20

வெள்ளக்காடாகிய கேரளா ; பலி எண்ணிக்கை 110 ஆக உயர்வு.!

கேரளாவில் கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு 116 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஜூலை 9 ஆம் தேதியில் இருந்து 2 வது முறையாக பெய்ய தொடங்கிய கனமழைக்கு இதுவரை 110 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.