Jul 20

40 நாட்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன்

ஒப்போ மற்றும் அமேசான் இந்தியா நிறுவனங்கள் இணைந்து ரியல்மி 1 எனும் ஸ்மார்ட்போனினை மே மாதத்தில் இந்தியாவில் வெளியிட்டன.

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி 1 ஃபிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து 40 நாட்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் முழுமையாக விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இடம்பிடித்து இருக்கும் ரியல்மி 1 ஸ்மார்ட்போன் பயனர் வழங்கும் மதிப்பீடுகளில் 4.4 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர், சோலார் ரெட் மற்றும் டையமன்ட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ.8,990, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.10,990 மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி  கொண்ட மாடல் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.