Jun 01

நான் மட்டுமல்ல; என் தாயும் குட்டைப் பாவாடை அணிவார்: பிரியங்கா சோப்ரா நெத்தியடி

‘’நான் மட்டுமின்றி, எனது தாயும்கூட குட்டைப் பாவாடை அணிவார்,’’ என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அதிரடியாகக் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது ஜெர்மனி பயணத்தின்போது, பெர்லின் நகரில், மரியாதை நிமித்தமாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.அப்போது, குட்டைப் பாவாடை அணிந்தபடி பிரியங்கா சோப்ரா இருந்தார். இந்த புகைப்படம், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 

எனினும், இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத பிரியங்கா சோப்ரா இதுபற்றி இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘’குட்டைப் பாவாடை எங்கள் குடும்ப ரத்தத்தில் ஊறிப் போன விசயம். நான் மட்டும் இல்லை; எனது தாயும் கூடத்தான் குட்டைப் பாவாடை அணிவார்,’’ என்று கூறியுள்ளார்.

பிரியங்காவும், அவரது தாயும் குட்டை பாவாடை அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.