Jul 20

படையினரால் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

பண்டாரவள காரடாகொல்ல மகா வித்தியாலய மாணவர்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலைமைத்துவ பயிற்சி கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.



இத்திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸின் ஆசீர்வாதத்துடனும் இராணுவ பயிற்றுனர்களினால் இப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த இராணுவ முன்னோடி படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் டபில்யூ. எம். ஆர்.பி விஜேசுந்தரவினால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.


இந்த திட்டத்தில் 22 மாணவர்கள் பங்கு பற்றியதுடன் ஸ்டப் சார்ஜன்ட் வி.ஏ.ஏ.என் கரவித்தவினால் இந்த நிகழ்விற்கு பங்களிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை, உடல் வலிமை, மற்றவர்களுக்கான மரியாதை, அணிகளுக்கான வேலைகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர். இப்பயிற்சி பட்டறையில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.