Jul 19

சுவிட்சர்லாந்தில் 400 க்கும் மேற்பட்ட முக்கிய மருந்துகளின் பற்றாக்குறை

உலகளாவிய உற்பத்தி வசதிகளில் எதிர்பாராத சூழ்நிலைகளால், இறக்குமதி செய்யப்படும் முக்கிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்தில் குறைவாகவே விநியோகிக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய மருந்துகளின் விநியோகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய விபத்துக்கள் மற்றும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சீனாவின் உற்பத்தி ஆலையில் அண்மையில் ஏற்பட்ட தீயும், 2016 ஆம் ஆண்டில் புPuerto Ricoவில் ஏற்பட்ட Hurricane சூறாவளியும் முக்கிய காரணிகளாகும்

சுவிஸ் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் Interlaken மருந்தக சங்கிலியின் தலைவரான Enea Martinelli, சுவிஸில் குறைந்தபட்சம் 388 வகை மருந்துகள் தற்போது குறைவாகவே விநியோகிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். ibuprofen மாத்திரைகள் – தரமான வலி நிவாரணிகளும் – இதய மருந்தான ஆஸ்பிரின் கார்டியோ அல்லது ஆஸ்துமா ஸ்பிரே வென்டலின் மருந்துகளும் இதில் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்