Jul 19

சுவிஸில் உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கையில் சரிவு!

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் 8,000 க்கும் அதிகமானவர்கள் கடந்த வருடம் CHF60 மில்லியன் பெறுமதியான உதவித்தொகைகளை பெற்றுள்ளனர் என்று சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது 2016 உடன் ஒப்பிடுகையில் 20% வீழ்ச்சியைக் குறிக்கிறது.

இடம்பெயர்வுக்கான செயலகம் (SEM) கடந்த வருடம் செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி புகலிடம் மறுக்கப்பட்ட 8022 பேருக்கு தங்குமிடம், உணவு, ஆடை, CHF56.9 மில்லியன் மதிப்புள்ள அடிப்படை மருத்துவ பராமரிப்பு ஆகிய அவசர உதவியைப் பெற்றுள்ளனர். இது 2016 உடன் ஒப்பிடுகையில் 9% குறைவாகும்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வகை மக்களின் எண்ணிக்கை 18% குறைக்கப்பட்டுள்ளது, என SEM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட தஞ்சம் கோருவோரில், 31% எரித்திரியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள். இதில் பத்தில் நான்கு பேர் 18-29 வயதினராகவும் 70% ஆண்களாகவும் இருந்தனர்.

SEM இன் படி, புகலிட விண்ணப்பங்களில் சரிவு ஏற்பட்டதற்கு பெரும்பாலும் இரு காரணிகள் காரணமாக உள்ளது. முதலாவதாக, மத்திய மத்திய தரைக்கடல் வழியாக வரும் மக்கள் ஜூலை நடுப்பகுதியில் இருந்து தடுக்கப்பட்டதும், இரண்டாவதாக, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் போன்ற முரண்பட்ட பகுதிகளிலிருந்து மிகக் குறைவானோரே குடியேறியுள்ளமையுமே ஆகும். அவை 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.