May 31

அமெரிக்கா முதல் தடவையாக பரிசோதிப்பு

அமெரிக்காவானது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய  ஏவுகணைக்கு எதிரான முதலாவது பாதுகாப்பு முறைமையை  முதல் தடவையாக  வெற்றிகரமாக  ஏவிப் பரிசோதித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஏவுகணைகளை தரையிலிருந்து குறுக்கீடு செய்யக்கூடிய மேற்படி  பாதுகாப்பு முறைமையானது  கலிபோர்னியாவிலுள்ள  வான்டென்பேர்க் விமானப் படை ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டதாகவும் அதன் மூலம் மார்ஷல் தீவுகள் பிராந்தியத்திலுள்ள கவாஜலெயின் அதோல்  எனும் இடத்திலிருந்து பசுபிக் சமுத்திரத்துக்கு மேலாக போலியாக ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முகவர் நிலையம்  கூறுகிறது.

 மேற்படி பரிசோதனைக்கு நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும்  ஆனால் வட கொரியாவுடனான பதற்றநிலை அதிகரித்துள்ள சூழ்நிலையிலேயே அந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்தது.