Jul 19

கோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா

கனடாவில் சிறப்பாக இடம்பெறும்  கியூ பெக் கோடை திருவிழாவானது டேவ் மத்தியூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு சிறப்பாக நிறைவடைந்தது.

ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த இசை திருவிழா, கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று நேற்று  நிறைவுக்கு வந்தது.

இதில் இடம் பெற்ற றொக் அண்ட் ரோல் பாடல்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த 11 நாட்களாக 250 ற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.