May 31

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுமாறு க. த. பே. அவசர அழைப்பு

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுமாறு கனடிய தமிழர் பேரவை அவசர அழைப்பு விடுகிறது

கடந்த 40 வருடங்கள் இல்லாத பெரும் மழைவீழ்சியை இலங்கை கண்டு வருகிறது. மழையாலும், மண்சரிவாலும் பெருமளவு பகுதிகள் பாதிக்கப்பட்டு, சுமார் 200 பேர்வரை இ‌றந்ததுடன் 5,00,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துவிட்டனர்.

இன்னும் பலர் காணாமல் போய்விட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக தமிழ்க் கனடியர்களின் இதயங்கள் துடிக்கின்றன. அவர்களுக்காக நாம் பிரார்த்திக்கிறோம். 

இதற்கு முன்னர்உலகின் பல்வேறு பகுதிகளில்  இயற்கைப் பேரிடர்கள் நடந்தபோதெல்லாம் உதவியதுபோல இலங்கை வெள்ள நிவாரண முயற்சிகளுக்கும் உதவிட வேண்டுமென நமது கனடிய அ‌ரசினை கனடிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது. 

நம்  நண்பர்கள், அயலவர்கள் குடும்பத்தினர் துயரத்துள்
ஆழ்ந்தபோதெல்லாம் தமிழ்க் கனடியர்களாக நாம் எப்போதுமே ஆதரவாக இருந்திருக்கிறோம். இவ்வகையில், தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணத்தை ஏற்படுத்த,  பண உதவியுடன் இயலுமானவகை ஆதரவு எதுவாயினும் தருமாறு தமிழ்க்கனடியர்களை மீண்டும் வேண்டிக்கொள்கிறோம். 

நன்கொடை வழங்க விரும்புவோர் தயவு செய்து  கனடிய தமிழர் பேரவை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்: (416) 240-0078