Jul 19

பட்ஜெட் விலையில் நோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் தனது X சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X5 என பெயரிடப்பட்டுள்ளது.

நோக்கியா X5 ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 16:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓ.எஸ். கொண்டிருக்கும் நோக்கியா X5 ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதை கொண்டு ஏ.ஐ. போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் ஏ.ஐ. சார்ந்த செல்ஃபி போர்டிரெயிட் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா X5 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.