Jul 19

கனடாவில், தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிரிழப்பு!

கனடா, பிரம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய காவற்துறை தெரிவித்துள்ளனர். 

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது விமான நிலைய வீதி, Countryside Drive பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் உதவியாளர்கள் அங்கு சென்றிருந்த போதும் குறித்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பீல் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.