Jul 19

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்கள் நலனுக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் : ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்கள் நலன்காக்கும் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 10ம் தேதி வரை தடையில்லாமல் தொடர வேண்டும்.

மத்திய பாஜ அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக திட்டங்களை அறிவித்து, நிலுவையில் உள்ள மக்கள் விரும்பும் மசோதாக்களை மட்டும் நிறைவேற்றவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவும் முன்வர வேண்டும். 

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கும், , நாட்டின் எல்லைப்புற பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும், மக்கள் ஏற்க முன்வராத, விரும்பாத திட்டங்களை முடக்குவதற்கும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும், நிவாரணத் தொகையையும் கொடுப்பதற்கும் முக்கிய முடிவுகளை எடுத்து அதற்குண்டான அறிவிப்புகளை நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நாட்களிலே அறிவித்து அவைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.