Jul 18

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி

கிளிநொச்சி மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு, வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பிற்காக 20 ஆயிரம் பெறுமதியான பொருட்கள், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனால் வழங்கப்பட்டது.


கிளிநொச்சி மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 102 போராளிகளுக்கே இவ்வாறு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

 

 கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலய மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலய இணைப்பாளர் பழனியாண்டி நந்தகுமார் விவசாய பிரதி அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினரும் தற்காப்புக்கலை யோகா ஆசிரியருமான பாலசிங்கம் சாந்தரூபன் , கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்களான அசோக்குமார், தர்மராசா, பூநகரி உறுப்பினர்களான கபீர், புவியரசன், பளை பிரதேச சபை உறுப்பினரான நகுலேஸ்வரன் மற்றும் வட்டார பிரதிநிதிகள் ஆகியோர் நிகழ்வில் இணைந்திருந்து வாழ்வாதார பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.