Jul 18

பசி தாங்காத கரடியின் வினோத செயல்! வீடியோ இணைப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த சுற்றுலாப்பயணிகள் திடீரென அங்கு வந்த கரடியின் நடவடிக்கையால் அதிர்ந்தாலும், பயப்படாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததோடு ஒரு பெண்மணி அதை வீடியோவும் எடுக்க அந்த சுவாரஸ்ய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.

காட்டை ஒட்டியிருக்கும் அந்த ஏரிக்கரைக்கு வந்த ஒரு கரடி பசியால் சுற்றுலா பயணிகளின் உடைமைகளை ஒவ்வொன்றாய் முகர்ந்து பார்க்கிறது.

கடைசியில் ஒரு பையில் ஏதோ உணவு இருப்பதை அறிந்த அந்த கரடி அந்தப் பையைத் திறந்து உணவு முழுவதையும் உண்டு முடிக்கிறது.ஆபத்தை உணராத சுற்றுலாப்பயணிகள் கரடிக்கு சற்று தொலைவிலேயே நின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஏரிக்குள் பாதுகாப்பான தொலைவில் நிற்கும் ஒரு பெண் அந்த காட்சியை தனது வீடியோ கெமராவில் பதிவு செய்கிறார்.இந்த தகவல் வெளியானதும் அந்த சுற்றுலாஸ்தலம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் பின்னர் திறந்த வெளியில் எதையும் சமைக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் மீண்டும் திறக்கப்பட்டது.