Jul 18

வடக்கு மாகாணசபை யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புங்குடுதீவில் உள்ள இரு பாடசாலைகளுக்கு கணனி மற்றும் போட்டோக்கொப்பி இயந்திரங்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம்யாழ். புங்குடுதீவு துரைச்சுவாமி வித்தியாலயத்தியாலயம் மற்றும் யாழ். புங்குடுதீவு றோ.க.த.க. பாடசாலைஎன்பவற்றிற்கு தலா ஒரு இலட்சம் வீதம் இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கி கணனியும்  போட்டோக்கொப்பிஇயந்திரமும் வழங்கி வைத்தார்.

மேற்படி பாடசாலைகளின் அதிபர்  ஆசிரியர்கள் பாடசாலை சமூகத்தினர் ஆகியோரின் கோரிக்கைக்கு

அமைவாக  பாடசாலையினை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம்யாழ். புங்குடுதீவு துரைச்சுவாமி வித்தியாலயத்;திற்கு ரூ பா ஒரு இலட்சத்துக்கு கணனி உபகரணங்களும்  யாழ்.புங்குடுதீவு றோ.க.த.க. பாடசாலைக்கு ரூபா ஒரு இலட்சத்துக்கு போட்டோ கொப்பி இயத்திரமும் கொள்வனவுசெய்து  18.07.2018 அன்று தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களானபுங்குடுதீவைச் சேர்ந்த ளு. யசோதினி  மு. நாவலன்  மு. வசந்தகுமாரன் ஆகியோர்களூடாக அந்தந்தபாடசாலைகளில் வைத்து வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில்; புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி செபஜீவன் மற்றும்பாடசாலைகளின் அதிபர்  ஆசிரியர்கள்  மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் சில பதிவுகளை படங்களில் காணலாம்.