Jul 18

பிரான்ஸில், திடீரென தீப்பற்றி எரிந்த விமானத்தினால் பலியாகிய உயிர்கள்!

Yvelines பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பயிற்சிவிப்பாளரும், மாணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் திங்கட்கிழமை Les Mureaux பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இருந்து பறக்க ஆரம்பித்த விமானம், சற்று நிமிடத்திலேயே கீழே விழுந்து உடைந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால், அவ் விமானத்தில் பயணித்த 70 வயதுடைய பயிற்சிவிப்பாளரும், 40 வயதுடைய அவரது மாணவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவர் மாத்திரமே பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானமான Tecnam P2002 JF எனும் விமானம் ஆகும். குறித்த விமானம் எதிலும் மோதவில்லை எனவும், அதில் பயணித்த இருவரில் ஒருவரின் கவனக்குறைவாக இது இருக்கவேண்டும் என அறியமுடிகிறது.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை, அப்பகுதி ஜோந்தாம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.